37 வயதான மாதிரி தெரியவில்லை இந்த 37 வயது இளைஞனின் ஆட்டத்தைப் பார்க்கும் பொழுது !!!
ஆஸ்திரேலியா என்றால் அனைவருக்கும் நடுக்கம் !
சச்சின் என்றால் ஆஸ்திரேலியர்களுக்கு நடுக்கம்!
ஒன்பது செஞ்சுரிகள் ஆஸி அணிக்கு எதிராக
கிட்டத்தட்ட 3000 ரன்கள் அவர்களுக்கு எதிராக மட்டும்!
உலக கிரிக்கெட் அணிகளின் சிம்மசொப்பனமாக திகழும் அவர்களுக்கு நிம்மதி இல்லா தூக்கத்தை தருவது நமது சச்சின் !!!
கிட்டத்தட்ட வெற்றிக்கனியை பறித்துவிட்ட நமது நாயகன் துரதிர்ஸ்ட்ட வசமாக அவுட் ஆனது ஆஸ்திரேலிய வீரர்களின் வேகத்தை அதிகப்படுத்தி வெற்றியை பெற்றுவிட்டனர் . நமது நாயகனின் அயராத உழைப்பு வீணானது.
ஆனால் உலக அரங்கில் என்னை மிஞ்சிட யாரும் இல்லை எனும் அளவில் அமைந்த சச்சினின் ஆட்டம் அனைவரையும் வாயடைக்கச் செய்தது !
சர்ச்சைகள் எழும் போதெல்லாம் சாதனைகள் படைத்திடுவ்து நமது நாயகனின் வழக்கம் .
இப்பொழுதும் அது நடந்திருக்கிறது.
இங்கே சச்சினின் பதினேழாயிரம் ரன்கள் குவிப்பை பற்றி எதுவும் குறிப்பிடபோவதில்லை . ஏனெனில் பதினேழாயிரம் விரைவில் இருபதாயிரமாக மாறப்போகிறது!.






0 comments:
Post a Comment